July 20, 2026

மதிப்புக்கூட்டுப் பொருள்கள் விற்பனையில் சாதிக்கும் மீனவப் பெண்

  முதலில், கேவிகே மூலம் ரூ.2 லட்சம் கடன் பெற்றேன். அதில் பாதிக்கும் மேற்பட்ட கடனைச் செலுத்தி விட்டேன். அதன்பிறகு, இத் தொழிலில் மேலும் ரூ.3 லட்சம் முதலீடு செய்தேன். 2024-ல் இத் தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டாலும், வேகமெடுத்தது என்னவோ, கடந்த ஓராண்டாகத்தான். சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவிலும் கலந்துகொண்டு, ஸ்டால் அமைத்து புதுப்புது பதார்த்தங்களைத் தயாரித்து, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றோம். 

 எங்களது தயாரிப்புகள் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன. எந்தவிதமான வேதிப் பொருள்களையும் சேர்ப்பதில்லை. மீன் சூப் பொடி, வஞ்சரம் மீன் ஊறுகாய், இறால் பொடி, நெத்திலி ஊறுகாய், வாளை உலர் மீன் பொடி, திருக்கை மீன் உலர்பொடி-திருக்கை மீன் தொக்கு, இறால் ஊறுகாய், சூரை மாசி கருவாட்டுப் பொடி, நண்டு சூப் பொடி, நெத்திலி உலர் மீன் பொடி, பாறை உலர் மீன் பொடி, கணவாய் உலர் பொடி, வஞ்சிரம் உலர் மீன் பொடி, பால் சுறா மீன் தொக்கு உள்ளிட்டவற்றை தயாரித்து, விற்பனை செய்கிறோம். நியாயமான விலைக்கே விற்கிறோம்.

  எங்களது நிறுவனத்தில் 10 பேர் பணிபுரிகின்றனர். உறவினர்கள் சிலரும் உதவியாக இருக்கின்றனர்.

  தயாரிப்புகளை மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம். அவர்கள் அதை தனித்தனியாக பாட்டில்களில் அடைத்து, எங்களது லேபிளை ஒட்டி விற்பனை செய்யுமாறு கோருகிறோம். இத் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களும் உள்ளன. விரைவில் சாதிப்போம் என்று கூறி முடித்துக் கொண்டார் தமிழரசி.

தொடர்புக்கு – 86828 67880, 99629 83527.