July 26, 2026

கால்நடைகளில் வித விதம்!ஆடு வகைகளின் அற்புதம்!!

டாக்டர்.பா.இளங்கோவன்

கால்நடைகள் உழவனுக்கு உதவுபவை அவற்றை பேணிய போது நல்ல நிலையில் இருந்த விவசாயி இன்று கைவிட்டதால் தன் கையைச் சுட்ட கதைதான் மனமிருந்தால் உண்டு மார்க்கம். பசு மாட்டைக் கன்றுகளுடன் சேர்த்து வைத்து பால் கறந்து விற்க முடியாதவர்கள் வெறும் பசுங் கன்றுகளை மட்டும் வளர்க்கலாம். ஆடுகளில் என்றால் ஒரு 50
ஆட்டுக்குட்டிகளாவது வளர்க்கலாம்.இதற்குபெரிய அறிவு தேவையில்லை.பல இரகங்கள் உள்ளன என்பது சிலருக்கு தெரியாது வளர்ப்பவர்களிடம் கேட்க வெட்கப்படுவதும் தவறு.

வெள்ளாட்டு வகைகளில் உள் நாட்டினம் என்று நமது இந்திய அளவில் முக்கியமானவை. ஜமுனா பாரி,  பீட்டல், மார்வாரி, கத்திய வாரி, பார்பாரி, தலைச்சேரி,சங்கம் நேரி, உஸ்மனா வாரி
முதலியன தமிழ் நாட்டினங்களில் கன்னி ஆடு, சேலம் கருப்பு ஆடு, மோளை ஆடு, கொடி ஆடு என பல விதமான வகைகள் உள்ளது.

*நல்ல ஆடுகளைப் எப்படி பார்த்து வாங்குவது?

இந்தியாவின் மத்ய மற்றும் தென் மேற்குப்பகுதியில் பெராரி, சுந்தி மற்றும் டெக்கால் என்ற வகைகளும் உள்ளன. இமாசலப் பிரதேசத்தில்
சம்பா,காடி, கஷ்மீரி, பாஷ்மினா வகைகள் காணப்படுகின்றன.

இராஜஸ்தானில்சிரோகி, ஆஹரானா வகைகள் உள்ளன. குஜராத்தில்குட்சி, தோகில வாடி, ஜால வாடி வகைகள் உள்ளன.

சில வெளிநாட்டு இனங்களைப் பயன் படுத்தி நமது நாட்டின் வெள்ளாட்டுப் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். ஆனால் ஆல்ப்ஸ் மலைத்தொடரைச் சார்ந்த ஆல்பைன் இனம், எகிப்திய இன வெள்ளாடும் இந்திய ஜமுனா பாரியும் சேர்ந்து கலந்து உருவாக்கிய நூபியன் இனம் குறிப்பிடத்தக்கவை.

சுவிட்சர்லாந்து நாட்டை சார்ந்த சானன் இனம், டோகன்பெர்க் இனம், துருக்கி நாட்டை சார்ந்த அங்கோரா இனம் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த மோயர் இனம் கிடாக்கள் 100 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 60 – 70 கிலோ எடையும் உள்ளவை. நல்ல ஆடுகளைப் பார்த்து வாங்குவது எளிது. பராமரிப்புக்கு கால்நடை மருத்துவ ஆலோசனை பெற்றால் போதும். மிக எளிதில் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் வளர்க்கலாம் அதற்குரிய நல்ல தீவன சாகுபடியும் தேவை. இரண்டு பல் உள்ளதாக ஒரு ஈற்றில் 2 அல்லது 3 குட்டி போடும்,  மிருதுவான பளபளப்பான தோல் கொண்டதாக சுறுசுறுப்புடன்,  முதுகுப்புறமும் பின் பகுதியும் அகன்று விரிந்ததாக, தாய்மை குணம் நிரம்பிய பெட்டை ஆடாக, ஆரோக்கியமான, நன்கு வளர்ச்சி அடைந்த ஆடே அற்புத லாபம் தரும்.

மேலும் விபரங்களுக்கு
98420 07125 உள்ளதே.