விவசாயிகள் வேளாண் சுற்றுலா என்ற புதிய ஏற்பாட்டின் படி அருகில் உள்ள ஒத்த கருத்துடைய விவசாயிகள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாய விரும்பிகளை கவர்ந்து ‘அக்ரி டூரிசம்’ எனப்படும் வேளாண் சுற்றுலா நடத்தி அதன் மூலம் கனிசமான வருமானம் பெறலாம்.
அதோடு மட்டுமல்லாது விவசாயிகள் பயிர் சாகுபடி இல்லாத காலங்களில் அருகே உள்ள ஆலயங்கள், பிற மாநில விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இதர மாநில சுற்றுலாக்கள் சென்று வரலாம்.கண்டுணர் சுற்றுலா என்பது விவசாயிகள் அனுபவிக்க முடியாததாகவே உள்ளது பணமும், உழைப்பும் காலமெல்லாம் கஷ்டமும் நஷ்டமுமாக உள்ள உழவர்கள் மனதளவில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வரும் அக்டோபர் 16ஆம் தேதி “உலக உணவு நாள்” உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் அனைத்து உறவு சொந்தங்களுக்கும் வேளாண் வணிகம் மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

More Stories
தலைவிரித்தாடும் வெப்பநிலை
மறந்துபோன மண் வள பாதுகாப்பு
ஆசிரியர் பக்கம்