டாக்டர் பா. இளங்கோவன்
நமது அன்றாட வாழ்வில் பலவகை பொருட்கள் தேவைப்படுகிறது.
குறிப்பாக இருக்க இடம், உடுக்க உடை, அமர இருக்கை, பாதுகாக்க கதவு, கூரை, நீர் கொண்டு வர குழாய்கள், எழுதுவதற்கு பேப்பர், போன்ற பயன்பாடுகள் அனைத்துக்கும் உதவிடும் உன்னத மூலதனப்பொருள்
தான் மூங்கில்.
நமக்கு உணவு தயாரிக்கவும் பலவித கைவினைப் பொருட்கள், ஷர்ட் பேண்ட், பனியன், டவல், மூங்கில் கதவு, மூங்கில் வீடு, மூங்கில் ஏணி, மூங்கில் கூடை, முறம், பிரம்பு, நாற்காலி, கூஜா, குவளை முதலியன தயாரிக்கலாம். ஏன் மூங்கில் மயான யாத்திரை ரதம் கூட நமக்கு தரும் அரிய இந்த மரமானது காற்றை சுத்தப்படுத்தும் வடிகட்டி போல நீரை மாசு நீக்கிட பயன்படும் ஒரு அற்புத தாவரம் எனவும் சொன்னால் அது மிகையாகாது.
மூங்கில் குருத்து உணவாகப் பயன்படுகிறது.
இந்த குருத்துக்கு ‘பேம்பு ஷீட்ஸ்’ என்பார்கள்.
மூங்கில் குழாய்களில்
பாலை ஊற வைத்து
தயிர் கடைந்து
சாப்பிடுவார்கள்.
மூங்கில் வீடு கட்டும் அற்புத பொருளாக உள்ளது. இரும்புக்கு மாற்று எனும் விதத்தில் இரும்பை விட எடை மிகவும் குறைவாக இருந்தாலும் அதிக வலிமை உடையது
என்பதால் பயோ ஸ்டீல் என்ற செல்ல பெயர் கொண்டது. அது மட்டுமா ?கட்டும் போது குறைந்த செலவு ஆவதால் எத்தனையோ ஏழைகளுக்கு
“குடி இருக்கும் கோயிலாக”
மூங்கில் உதவுகிறது.
பருத்தியில் நார் உள்ளது போலவே மூங்கில் மெல்லிய ஓட்டைகள் கொண்டது. இதனால் அதிக வியர்வை உறிஞ்சும் திறன் கொண்டது.
மூங்கிலில் பஞ்சு எடுத்து
பார்க் அவென்யு எனும் நிறுவனம் சட்டை தயாரித்தும் பேண்ட் தைத்தும் அசத்துகிறது இந்த ஆடைகள் உடலுக்கு இதம், அளித்து இயற்கையோடு இயல்பு வாழ்வு வாழ செய்து முன்னூறு சத வியர்வை உறிஞ்சும் திறனால் பலவிதமான வியாதிகள் நோய்கள் வராது தடுக்கிறது ஏராளமான பொருள் உற்பத்திக்கு மூலதனமாகி ஏற்றுமதிக்கும் உதவுவதால்தான் பச்சைத்தங்கமாக போற்றப்படுகிறது.
வீடுகளில் வெளியேறும் கழிவு நீரையும், பாத்ரும் லெட்ரின் கழிவு நீரையும் குழி தோண்டி மூங்கில் மரத்தின் அடியில் விடலாம். அஸ்ஸாமில் எல்லா வீடுகளிலும் வீட்டு அசுத்த நீரைக் குடிக்கும் கருவியாக மூங்கில் பயன்படுகிறது. காற்றில் உள்ள தூசு நீக்கும் அற்புத குணம் கொண்ட மூங்கில் ஒலி மாசு நீக்கும் அஸ்ஸாமில் பிரத்யேகசெப்டிக் டேன்க் இல்லை.
மூங்கில் குளிர் தாக்காது தடுக்கும். ஏன் கதகதப்பான சூழலில் வீடுகளை வைப்பதால் ஏர்கண்டிசன் மெசின் தேவையில்லை. இதனால் மின்சார செலவு கூட குறையும். காற்று மாசு படுவது குறையும்.
நமது நாட்டில் வண்டிகள் தயாரித்திட உதவும் மூங்கில் ஜெர்மனி நாட்டில் பிளாஸ்டிக்குடன் மூங்கில் நாரைக் கலந்து காரைத் தயாரிக்கின்றனர். இது இரும்மை விட அதிகமான வலிமை (6 மடங்கு) கொண்டது என்பதால் விபத்து ஏற்பட்டலும் உயிர்ச் சேதம் குறையும் பாதுகாப்பு குறித்து அச்சம் தேவையில்லை.
மூங்கிலால் பலவகைப் பயன்கள் உள்ளதால் இந்திய நாட்டின் தலையாய கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை நீக்கும் அற்புத சக்தி மூங்கிலுக்கு உண்டு. காகித தொழிற்சாலைகள், கட்டுமானப்பணி புரியும் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மூலப் பொருளாக மூங்கில் பயன்பட உள்ளதால் ஆண்டு தோறும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்கள் கிராமத்தை விட்டு நகருக்கு
நகராமல் அங்கேயே இருந்து வளம்பெற உதவுவதால் மூங்கிலை “நாட்டின் பாதுகாவலன்” எனலாம்.
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று கூறும் பழமொழியை மூங்கிலுக்குத் தான் முதலில் சொல்ல வேண்டும். ஒரு ஏக்கரில் 200 மூங்கில் கன்றுகளை நடலாம். அது வளர்ந்த பிறகு வெட்டி 60 ஆண்டுகளுக்கு விற்கலாம். அதனால் தான் நமது நாட்டின் அனைத்து பகுதிக்கு ஏற்ற “காசு கொட்டும் பிசாசு” ஆக மூங்கில் உள்ளது. இதனை எல்லாவகை மண்ணிலும் வளர்க்கலாம். குறைந்த பட்சமாக தினசரி 2 லிட்டர் நீர் இருந்தால் கூட வளரும் சிறப்பு தன்மை மூங்கிலுக்கு மட்டுமே உண்டு.
ஒரு ஏக்கரில் இருந்து நான்கு வருடம் நன்கு பேணிய பகுதியில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு அறுபதாயிரம் மூங்கில் கழிகள் குறைந்த பட்ச வருமானமாக பெறலாம். அதாவது ஒரு மரத்தில் இருந்து (தினசரி 1 அடி முதல் 11/2 அடி வரை மூங்கில் வளர்வதால்) முப்பது முதல் நாற்பது அடி வரை உயரமாக வளரும் நாற்பது கழிகளைப் பெறலாம். இந்த நாற்பதில் முப்பது கழிகளை வெட்டி விற்கலாம்.
மூங்கில் தரம் பிரித்து குறைந்த பட்சம் ஒரு மரத்தில் இருந்து முன்னூறு முதல் ஐநூறு வரை ஒரு வருடத்தில் பெறலாம். அதாவது இருநூறு கன்றுகள் தலா முன்னூறு முதல் ஐநூறு மூங்கில் கழிகள் வரை மகசூல் தரும் போது அறுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை கிடைக்கும்.
வேறு எந்தப் பயிரிலும் இல்லாத மகா சிறப்பு அம்சமாக முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து பிரதி வருடம் பணம் தரும் மூங்கில் உலக வங்கியையும் விட அற்புத “சிறப்பு வங்கி” தான்.
மூங்கில் வளர்த்திட இருநூறு குழி போட்டு இருநூறு கன்றுகள் வாங்கி மழை வரும் தருணம் நடுவதற்கு சராசரியாக ஐந்து ஆண்டு பராமரிப்புக்கு ஒரு குத்துக்கு சொற்ப செலவாக முப்பது கழிகளை வெட்டி விற்க சுமார் கழிக்கு ரூபாய் 200/க்கு விற்றாலும். ஒரு ஏக்கரில் 200 குத்துகளில் 10 வெட்டி 2000 கழிக்கு சாதாரணமாக 2000×200=400000 ரூபாயை ஒரே ஏக்கரில் இருந்து பெறலாம்.
ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் 60 ஆண்டுக்கு தொடர் வரவை பெறலாம்.மரத்துக்கு ஐம்பது
ரூபாய் மட்டுமே செலவாகும்.
‘விவசாயத்தில் லாபமில்லை’ என்ற கூற்றைப் பொய்யாக்கிட நம் உழவர்களுக்கு
உதவுமே மூங்கில்! இன்றே நடுவோம்!! வாருங்கள்…
மூங்கில் கன்றுகள் தேவையா
தயக்கமின்றி
அழைக்கலாம்
98420 07125
டாக்டர் பா.
இளங்கோவன்

More Stories
பெண் விவசாயிகள் நிறைந்த தோப்புப்பட்டி
அதிகாரிகளால் பாராட்டுப் பெற்ற இயற்கை விவசாயி வேலு
வேளாண் பண்ணை மேம்பாட்டில் முனைப்புக் காட்டும் முன்னாள் ராணுவ அதிகாரி