1. காய் மற்றும் தண்டு துளைப்பான்
*• அறிகுறிகள்:
• செடியின் உச்சிப் பகுதிகள் வாடித் தொங்கும்.
• மொட்டுகள் மற்றும் பூக்கள் உதிர்தல்.
• காய்களில் துளைகள் ஏற்பட்டு, புழுக்கள் அதனுள் உட்கொண்டு காய்களைச் சேதப்படுத்தும்.
*• கட்டுப்படுத்தும் முறைகள்:
• பாதிக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
*2. இலை மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்
• *அறிகுறிகள்:
*• அசுவினி :
இலைகளின் அடிப்பகுதி மற்றும் தளிர் கிளைகளில் சாற்றை உறிஞ்சும். இலைகள் சுருண்டு, வளர்ச்சி குன்றும்.
• *இலைப்பேன்/ வெள்ளை ஈக்கள் :
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், ஓரங்கள் கீழ்நோக்கி வளைதல் மற்றும் இலைகள் காய்ந்து உதிர்தல். வெள்ளை ஈக்கள் மஞ்சள் தேமல் வைரஸ் நோயைப் பரப்புகின்றன.
• *கட்டுப்படுத்தும் முறைகள்:
• வயலில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை அமைத்து ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
• வேப்ப எண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம்.
*3. மாவுப்பூச்சி
• *அறிகுறிகள்:
• இலைகளின் அடிப்பகுதி, தண்டு மற்றும் காய்களில் பஞ்சு போன்ற வெண்மையான திட்டுக்களாக ஒட்டிக்கொண்டு சாற்றை உறிஞ்சும்.
• இலைகள் சுருண்டு, மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும்.
*• கட்டுப்படுத்தும் முறைகள்:
• இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் கரைசல் தயாரித்து வாரம் ஒருமுறை இயற்கை முறையில் தெளிக்கலாம்.
மேலும் விவசாய ஆலோசனைக்கு
*8807494699
*பிரவினா அக்ரி

More Stories
நெல்லின் வளர்ச்சியை முடக்கும் ஆனைக்கொம்பன் ஈ!” 🌾
தென்னையில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி
நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் புகையான் நிலபர்வட்டா லூகன்ஸ்