October 4, 2026

வெண்டைக்காய் பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளும், அவற்றின் சேத அறிகுறிகள்

1. காய் மற்றும் தண்டு துளைப்பான்

*• அறிகுறிகள்:

• செடியின் உச்சிப் பகுதிகள் வாடித் தொங்கும்.
• மொட்டுகள் மற்றும் பூக்கள் உதிர்தல்.
• காய்களில் துளைகள் ஏற்பட்டு, புழுக்கள் அதனுள் உட்கொண்டு காய்களைச் சேதப்படுத்தும்.

*• கட்டுப்படுத்தும் முறைகள்:

• பாதிக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

*2. இலை மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்

• *அறிகுறிகள்:

*• அசுவினி :

இலைகளின் அடிப்பகுதி மற்றும் தளிர் கிளைகளில் சாற்றை உறிஞ்சும். இலைகள் சுருண்டு, வளர்ச்சி குன்றும்.

• *இலைப்பேன்/ வெள்ளை ஈக்கள் :

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், ஓரங்கள் கீழ்நோக்கி வளைதல் மற்றும் இலைகள் காய்ந்து உதிர்தல். வெள்ளை ஈக்கள் மஞ்சள் தேமல் வைரஸ் நோயைப் பரப்புகின்றன.

• *கட்டுப்படுத்தும் முறைகள்:

• வயலில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை  அமைத்து ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
• வேப்ப எண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டை கரைசல்  தெளிக்கலாம்.

*3. மாவுப்பூச்சி

• *அறிகுறிகள்:

• இலைகளின் அடிப்பகுதி, தண்டு மற்றும் காய்களில் பஞ்சு போன்ற வெண்மையான திட்டுக்களாக ஒட்டிக்கொண்டு சாற்றை உறிஞ்சும்.
• இலைகள் சுருண்டு, மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும்.

*• கட்டுப்படுத்தும் முறைகள்:

• இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் கரைசல் தயாரித்து வாரம் ஒருமுறை இயற்கை முறையில் தெளிக்கலாம்.

மேலும் விவசாய ஆலோசனைக்கு
*8807494699
*பிரவினா அக்ரி