வேளாண்மை மற்றும் *கால் நடை வளர்ப்பு
இரண்டுமே இரண்டு கண்கள் போல!. மனித சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரை பால் சார்ந்த வாழ்க்கை முறையே தொடர்கிறது. விவசாயம் எப்படி அழிவை நோக்கிச் செல்கிறதோ…. அதை விட வேகமாய் கால்நடை செல்வங்கள் நம்மை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றன. உலக அரங்கில் இந்தியா பால் உற்பத்தியில் 247 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்து 24-25% உலக மக்களின் தேவைக்கு நமது பங்களிப்பை
பகிர்கின்றோம்.
இந்திய அளவில் உ·பி, குஜராத் போன்ற மாநிலங்கள் பால் உற்பத்தியில் முன்னிலை வகுத்தாலும் நாம் சற்று குறைவான உற்பத்தியே செய்து வருகிறோம்.
ஒரு விஞ்ஞானிகள் கூட்டத்தில் பங்கேற்ற போது கிடைத்த தகவல்…
வடமாநிலங்களில் இன்னும் எருமை
மாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
நம் உள்ளுர் கால நிலைக் கேற்ப வளர்ந்து வளம் குன்றா அளவு பால் உற்பத்தி தருகிறது.
பால் உற்பத்திக்கான செலவு நடைகள் அதிகரிப்பு- அதீத வெப்பம் மற்றும் பருவ கால மாற்றங்களால் உற்பத்தி குறைவு மற்றம் கால் நடைகள் இழப்பு தவிர்க்க முடியாததாகிறது. இளங் கன்றுகள் மற்றும் பசு மாடுகள் கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்டு வருவதால் பேரிழப்பு ஏற்படுகிறது. பால் வளம் பெருகிட நாம் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடன் வசதி, ஊக்கத் தொகை, மானிய விலையில் தீவனங்கள் வழங்கினால் மட்டுமின்றி பால் கொள்முதல் விலையையும் உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
உலக பால் வள நாளில் பால் வளம் பெருகிட கால்நடை வளர்பு மற்றும் பால் உற்பத்தி சார்ந்த துறையில் உள்ள அனைவருக்கும் வேளாண் வணிகம் வாழ்த்தினை பகிர்ந்து கொள்கிறது.

More Stories
வாங்க/விற்க/சந்தை