June 7, 2026

விவசாய தொழில்நுட்பங்கள்

தென்னை மரத்துக்கு உடனடியாக செய்ய வேண்டியவை

  1. தினசரி குறைந்தபட்சம் 40 லிட்டர் தண்ணீர் அல்லது 60 லிட்டர் பாய்ச்ச வேண்டும்
  2. இக்குழுவின் பரிந்துரைப்படி தொழு உரம் எலும்பு உரம் வேப்பம் புண்ணாக்கு சுண்ணாம்பு மற்றும் சாம்பல்அடி கலந்த இடு பொருள்களை அடி உரமாக வைக்க வேண்டும்
  3. 200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ட்ரைக்கோ டெர்மா விரிடி, ஒரு லிட்டர் பேசிலோமசிஸ் ஒரு லிட்டர் மெட்டார் icm 3 லிட்டர் மீன் அமிலம் கலந்து ஒரு இரவு வைத்த பின்பு ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் என 15 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு தடவை ஊற்றலாம்
  4. 200 லிட்டர் தண்ணீரில் எருக்கு கரைசல் தயார் செய்து அதனுடன் குயூமிக் அமிலம் 2 லிட்டர், கடல்பாசி உரம் ஒரு லிட்டர் மீன் அமிலம் 2 லிட்டர் வாம் பவுடர் இரண்டு கிலோ கலந்து ஒரு இரவு வைத்த பின்பு மரத்திற்கு மூன்று லிட்டர் என ஊற்றி விடலாம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்