June 7, 2026

ஆசிரியர் பக்கம்…

தமிழகம் முழுவதும்
வெப்ப அலை கடந்த ஜந்து ஆண்டுகளை விட அதிகமான அளவு வீசி வருகிறது. இடை இடையே அங்காங்கே மழை பெய்தாலும் வேளாண்மைக்கு பெரிய அளவில் உதவி கரமாக இல்லை. பயிர்களும்….ஏன்? மரங்கள், கால்நடைகள் என பல்லுயிர்களும் வெப்ப அலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் வெப்ப அலைத் தாக்கம், மனித சமுதாயத்தையும் பாதித்துள்ளது, நாமனை வரும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கு மிடையே இதர உற்பத்தி பொருட்களுக்கும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மிடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது. வேளாண் உற்பத்தியாளர்கள் நவீன அறுவடை, அறுவடைக்குப் பின்
தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்தல், நவீன மதிப்புக் கூட்டிய
பொருட்கள் தயாரித்தல், பேக்கிங் மற்றும் உரிய நேரத்தில் நுகர்வோரைச் சென்றடைதல், அதற்காக சமூக வலை தளங்கள் விளம்பர யுக்திகளைப் பயன் படுத்துதல் (Digital Marketing Solutions) போன்றவையே நம் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நலம் பயப்பவையாக இருக்கும்.

“இயற்கை வேளாண்மை” என்ற பெயரில் இன்று ஏராளமான போலி விற்பனையாளர்கள் தோன்றி நுகர்வோரை ஏமாற்றி வருகின்றனர். சான்று பெற்ற அல்லது நேரடி உற்பத்தி அல்லது நமது கண்ணுக்குத் தெரிந்த உற்பத்தியாளர் என்றால் மட்டுமே நம்பி வாங்க வேண்டும்.
.

கால நிலை , பருவ மழை மற்றும் வானிலை
மாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் வந்தாலும் கிராமப்புற விவசாயிகள் அதிகம் அறிந்திருக்க வில்லை. வேளாண் விரிவாக்கம் சரிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. கிராம அளவில் செயல்படாமல் எந்த வேலை யார் செய்வது தலைமை யார்? என்ற குழப்ப சூழலில்…. சராசரி மழையளவோ? பருவ கால மாற்றங்கள் இயற்கையா செயற்கையா?
எதுவுமே தெரியாத அவல நிலையில் அரசு இயந்திரங்கள் அசைவின்றி இயங்கு கிறது.

மாற்றம் வேண்டும்! வோளாண் பெருமக்கள்
வாழ்வில் வளம் பெற வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை, மீன்வளம் போன்ற துறைகள் இணைந்து செயல் பட வேண்டும். களப் பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற் கொருமுறையாவது ஆய்வுக் கூட்டமில்லா தொழில் நுட்ப் பயிற்சி வழங்க வேண்டும்.

வேளாண்
விளைபொருள் உற்பத்தியாளர்களை
ஊக்குவித்தல், நவீன வேளாண் குறித்த விழிப்புணர்வு அகில உலக மற்றும் அகில இந்திய அளவில் நடை பெறும் வேளாண் வணிகம் சார்ந்த “கண்காட்சி” களுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க நாம் அனைவரும் இணைந்து வழிகாட்டுவோம்!! வாரீர்!!!

அன்புடன் ஆசிரியர் இராம.சுப்ரமணியன்