September 9, 2026

ஆசிரியர் பக்கம் …

அனைத்து துறைகளிலும் “செயற்கை நுண்ணறிவு”(AI) கோளோச்சி வந்து கொண்டிருந்தாலும், வேளாண் துறையில் அதன் தாக்கம் இன்னும் பெரிதாக பிரதிபலிக்கவில்லை.

இயந்திர மயமாக்களுக்குப் பின் விவசாயத்
திலிருந்து பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாடு பெரிதும் குறைந்து விட்டது.

உணவுத் தேவைக்கு கால் நடைகளும், ஓட்டு வேட்டைக்கு மனித வளமும்
சூரையாடப்படுகிறது.
ஆனாலும்
விவசாயிகள் நம் பாரம்பரியத் தொழிலான வேளாண்மையை’ விட்டு வெளியேற முடியாத கட்டாயம்!…

இச்சூழலில் ஆண்டு தோறும் கோவையில் நடைபெறும் கொடீசியா விவசாயக் கண்காட்சி இந்த ஆண்டு
சற்று மாறுபட்டதாகவே தெரிந்தது. நவீன தொழில்நுட்பங்களுடன் ஏராளமான கருவிகள், யுக்திகள், தொழில்நுட்பங்கள்… இன்னபிற., என ஏராளமான வெளிநாடு / வெளிமாநில நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.

அளவுக்கு அதிகமான கூட்டம், எந்த அரங்கையும் தெளிவாகப் பார்க்க, ஆலோசிக்க முடியவில்லை! இதே போன்ற நிகழ்வுகள் மதுரை, தஞ்சை, விழுப்புரம், தர்மபுரி போன்ற நகரங்களில் நடத்திடலாம். மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்!…

பல்வேறு அரசு துறைகளில் லஞ்சம் ஒழிந்துவிட்டது / மறைந்து கொண்டிருக்கிறது என்ற விளம்பரங்கள் ஒருபுறம்! மறுபக்கம் மக்களே! பயனாளர்களே ! தங்களுக்கு காரியும் உடனே நடக்கவேண்டும், விதி மீறல்கள், தங்களின் சுய லாபம் என வலிய சென்று லஞ்ச லாவண்யத்தை ஊக்குவிப்பதை
கண் கூடாகக் காண்கிறோம்

மக்கள் பங்கேற்பில்லாத எந்தத் திட்டமும்
வெற்றியைத் தராது! கிராம அளவில் நியாயவிலைக் கடைகளில் துவங்கும் சிறிய அளவிலான முறைகேடுகளை யாருமே தட்டிக் கேட்பதில்லை!..

லஞ்சம், ஊழல் எனக்
கூக்குரலிடும் பலர் இலவசமாக ரேசன் கடைகளில் வழங்கப் படும் இலவச அரிசி, கோதுமை, மானிய விலையில் விற்கப் படும் பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அதை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது போன்ற செயல்கள் நியாயமானவையா? எனச்சிந்திக்க வேண்டும்.

சூப்பர் எல்.நினோ பாதிப்புகள் நமது வேளாண்மையை பெரிய அளவில் பாதித்து வருகிறது . மாற்று சிந்தனைகள், வணிக ரீதியிலான நம் நடவடிக்கைகள்
விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் என நம்புவுவோமாக!… அன்புடன்…


அக்ரி. இராம. சுப்பிரமணியன்