திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 25.09.2026 காலை 10 மணி அளவில் ‘கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை சம்பந்தமான சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு 0421 2248524 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை

More Stories