June 7, 2026

பிரித்து போடுக மூலதனத்தை….

பொதுவாக ஒரு பயிர் ஒரு தொழில் என்று தேர்வு செய்வதை விட பல பயிர் பல தொழில் குறித்து சிந்திப்பது நன்று. நாம் ஒன்றை மட்டும் நம்பி இருக்கும் போது பல்வேறு காரணிகளால் இழப்பு வந்தால் பேரிடியாகுமே.

ஆம் பல விவசாயிகள் தனது நிலத்தை உச்சக் கட்ட வருமானமாக ஒரு ஏக்கருக்கு ₹.25 லட்சம் வருமானம் எடுக்க அற்புதமாக எடுக்க திட்டமிட்டால் அதை செயல் படுத்தும் பொருட்டு நிபுணர்களின் ஆலோசனை பெற்று பல பயிர் மற்றும் அவற்றை சார்ந்த தொழில்களைப் பற்றி முதலில் நன்கு அறிந்து அதில் இறங்க வேண்டும்.

குறிப்பாக தினந்தோறும் வருமானம், வாரா வாரம் வருமானம், மாதா மாதம் வருமானம் குறிப்பிட்ட சீசனில் மட்டும் வருமானம் என்று விதவிதமாக பயிர்கள் மூலம் பணம் வர வைக்க வழிகள் உள. நீங்கள் நெல் சாகுபடி செய்தால் கூட அதிக லாபம் பார்க்கலாம். ஆம் நாட்டு ரகங்கள் தேர்வு நெல்லுடன் மீன் வளர்ப்பு, குறுகிய காலம் மற்றும் மத்ய காலம் வளர உகந்த ஏற்றுமதிக்கு ஏற்ற நெல் ரகங்கள் இவற்றை நிலப்பரப்புக்கு
தக்கவாறு தேர்வு செய்யலாம்.

முடிவெடுக்க இயலாத தருணம் தேவை குறைந்தது மூன்று நிபுணர்களிடம் ஆலோசிக்கவும். ஒரே நபரை நம்புவதை விட ஊர் பற்றி அறிந்த மூத்த உயர் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரும் ஆலோசனை பெறலாம்.ஆம் தீர்வுக்குரிய வாய்ப்பு பரவலாக கொட்டி கிடைப்பதில்லை. பல தருணம் முறையான பயிற்சி நாமே எடுத்தால் தான் நினைத்ததை முடிக்கலாம்.

காய்கறிகளை சாகுபடி செய்ய திட்டமா? கொஞ்சம் கறிவேப்பிலை, புதினா, அகத்தி கிரைகள் முதலியவற்றை பயிர் திட்டத்தில் சேர்க்கவும். நுகர்வோர்க்கு விற்க உதவும் சாதனங்களை பயன்படுத்தி விற்க வேண்டும்.

கொஞ்சம் காய்கறிகளில் முடிந்தவற்றை வற்றல் ஊறுகாய் போன்ற நீண்ட நாள் சேமிக்க உகந்ததாக மாற்றலாம்.

பயிர் சாகுபடி முடிவை மண் வளத்தை நீர் வளத்தை வைத்து தீர்மானிக்க வேண்டும். பல தருணங்களில் முடிவுக் குழப்பமே குறைந்த வரவுக்கு வழி வகுக்கிறது என்பது இன்னும் பலரால் உணரப்படவில்லை .

நன்கு ஆலோசித்து ஆய்வுகள் செய்து நுணுக்கங்கள் என்ற அற்புத உத்தியை உபயோகியுங்கள் என்றுமே நல்வரவு நிச்சயம்

நம் காசு …நமக்கு பொற்காசு… ஒரு காசு பேணிணால் பல காசு தேறுவது உறுதி…

Dr.பா.இளங்கோவன் M.sc,(Agri) M.B.A.,PhD.,
வேளாண்மை தோட்டகலைப் பயிர் ஆலோசகர்
ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் .(ஆராய்ச்சி)
தமிழக அரசு
cell:98420 07125