October 4, 2026

விவசாயம்+கார்பன் சந்தை ஓர் கண்ணோட்டம்..

*தற்பொழுது உள்ள சூழலில்  விவசாயி உணவை மட்டும் உற்பத்தி செய்யாது அவர் சுற்றுச்சூழல் மேலாண்மை சேவையையும் வழங்க முடியும்.*

ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியில் காற்றில் மாசு உருவாக்குகிறது.

அந்த மாசை குறைக்க, மாசு கட்டுப்பாட்டிற்காக அந்த மாசு கட்டுப்பாடு சேவை செய்பவர்களுக்கு சன்மாத்தை கார்பன் சந்தை மூலம் தருகின்றது.

அந்த நடவடிக்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் காற்று மாசு பாதிப்பு குறைகிறது.

ஒரு விவசாயி தனது வயலில் மரம் வளர்ப்பு , கழிவு மறுசுழற்சி, இயற்கை உரம்,  Direct Seeded Rice (DSR), குறைந்த உழவு, , நீர் மேலாண்மை,  இரசாயன உரம் தவிர்த்து உயிர் உரம் , இயற்கை உரம், இயற்கை பூச்சிகட்டுப்பாடு போன்ற பூமி வெப்பம் அடைய தூண்டும் காற்று  மாசு தவிர்க்கும்  climate-smart practices ஐ கடைப்பிடித்தால் கார்பன் சந்தையில் இருந்து சன்மானம் கிடைக்கும்.

இதன் மூலம் கார்பன் டை ஆக்சைட் , Methane , நைட் ரஸ் ஆக்ஸைட் போன்ற
காற்றில் மாசு உண்டாக்கும் greenhouse gas emissions குறையலாம், மண் கரிம கார்பன் அதிகரிக்கலாம், பயிர் கழிவு எரிப்பது தவிர்க்கலாம், நீர் மற்றும் எரிசக்தி பயன்பாடு குறைக்கலாம், மண்ணின் ஆரோக்கியம் மேம்படலாம்

இன்று இவை வெறும் “நல்ல விவசாய முறைகள்” என்ற அளவில் மட்டும் நிற்காமல், இன்று சரியான methodology மூலம் அளவிடப்பட்டு, கணக்கிடப்பட்டு, சுயாதீனமாக சரிபார்க்கப்பட்டால், carbon market-ல் climate benefit ஆக விவ்சாயிக்கு கிடைக்கும்.

இந்தியாவில் செப்டம்பர் 17 அன்று Punjab Agricultural University, Ludhiana-வில் நடைபெற்ற நிகழ்வில், சுமார் 2,550 சிறு விவசாயிகளுக்கு ₹2.9 கோடிக்கும் அதிகமான Soil Carbon Payments வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த programme-ல் சுமார் 30,000 acres நிலப்பரப்பும், 50,000-க்கும் அதிகமான carbon credits-உம் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த Carbon Payment என்பது விவசாயி விளைவித்த நெல்லை விற்று பெற்ற வருமானத்திற்கு மேலதிகமான வருமானம்.

அதாவது, நெல் வருமானம்  + உலக வெப்பமைடதல் தடுப்பு சேவையாக கார்பன் சந்தை தந்த சேவை வருமானம்

மேலும், இந்தப் பணம் 2026-ல் வழங்கப்பட்டாலும், அதற்கான நெல் விவசாயம் நடைமுறைகள் 2019–2022 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை. சேவை அவை அளவிடப்பட்டு, சரிபார்க்கப்பட்டு உருவாக்கப்பட்டு அது carbon credits  ஆக கார்பன் சந்தையில்  மூன்றாண்டு   விற்கப்பட்டு இன்று அந்த  விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.இங்கே ஒரு முக்கியமான விஷயம்:

“ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய்” அல்லது “ஒரு ஹெக்டேருக்கு இவ்வளவு ரூபாய்” என்று நிரந்தர rate ஆக கார்பம் சந்தையில் இருந்து கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு விவசாயி மேற்கொண்ட  நடைமுறைகளுக்கும் மாறுபடும்.

அதுபோல் திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் carbon credit கிடைக்கும் என்றும் உறுதியில்லை. 

திட்டம், methodology, baseline, additionality, measurement, verification மற்றும் credit allocation ஆகிய அனைத்தும் சரியாக அளவிடப்படியதாக இருக்க வேண்டும்.

இனி நாம் விவசாயத்தில் உணவு உற்பத்தியுடன்  மட்டும்  நிற்காமல்,  +  மண் வளம் , நீர் வளம் உயிர் வளம் மேலாண்மை மற்றும் பூமி வெப்படைவதை தடுக்கும் போர் வீரர் என்று பார்க்க வேண்டிய காலம் வருகிறது.

தொழிற்சாலை மாசைக் குறைப்பதற்காக செலவு செய்கிறது.

விவசாயி தனது வயலில் இயற்கை வளங்களையும் ஐயும் சிறப்பாக நிர்வாகித்தால்.அதன் மூலம் பூமி வெப்படைவதை தடுக்கும் பணியிலும் அதற்குரிய சன்மான வருமானத்தை கார்பன் சந்தையில் பெற முடியும். 

“இனி விவசாயம் என்பது உணவு உற்பத்தி மட்டும் அல்ல;
சுற்றுச்சூழல் மேலாண்மையும் கூட.”

அடுத்த முறை யாராவது,

“Carbon credit என்றால் என்ன?” என்று கேட்டால்,

“Carbon-ஐ விற்பது” என்று மட்டும் சொல்லாமல்,
“விவசாயி தனது நிலத்தில் பயிர் சாகுபடியுடன் உருவாக்கிய Verified Environmental Service-க்கான் சன்மானம்”
என்று புரிந்துகொள்வோம்.