October 4, 2026

நெல்லின் வளர்ச்சியை முடக்கும் ஆனைக்கொம்பன் ஈ!” 🌾

1) நெற்பயிரின் தூர்களின் நடுக்குருத்து இலை பகுதியை தாக்குவதால் பாதிக்கப்பட்ட இலை யானது வெங்காய இலை போன்று காணப்படுவதே  முதன்மையான அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகள் நாற்றங்கால் பருவத்திலிருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும்.
இதனுடைய புழுப்பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்பதனால் இது ஆனைக் கொம்பன் என்று அழைக்கப்படுகிறது

2)தாக்கப்பட்ட துார்களால் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கதிர்கள் உருவாவது தடைபடும் அல்லது கதிர்களே உருவாகாது.

3)புழுக்கள் நெற்பயிரின் குருத்துக் களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்

*பூச்சியை கண்டறிதல்*

முட்டை : இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளப்பளப்பான வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடும்.

புழு : புழு 1 மி.மீ நீளமுடன் முன் பகுதியில் கூர்மையாக இருக்கும். இவை இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று, வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும்.

முதிர் பூச்சி:
மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கொசுவை போன்று நீண்ட மெல்லிய கால்களுடன் சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும்.

*மேலாண்மை*

உழவியல் முறைகள்:
1)எதிர்ப்புத் திறனுடைய இரகங்களான  பயிரிட வேண்டும்.

2)முதல் பயிர் பருவத்தில், தாமதமாக நடவு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

3)அறுவடை செய்தவுடன் உடனடியாக நிலத்தை உழவேண்டும்.

4)தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்கலாம்.

5)காட்டுநெல்,புல் வகைகள் போன்ற இணை களைகள் மாற்றுப்பயிர்களை அழிக்கவேண்டும்.

6)விளக்குப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை (அதாவது 10 இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள்) விட பாதிப்பு அதிகமாகும்போது மகசூல் இழப்பு ஏற்படும். இதனை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்போ சல்பான் 25 சத ஈ.சி -300 மிலி அல்லது பிப்ரோனில் 5 சத எஸ்.சி – 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்திடலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.