
தென்னை மரங்களுக்கு அதிக சேதத்தையும், வருமான இழப்பையும்,காண்டாமிருகவண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டுகள் ஏற்படுத்துகின்றன. சிவப்பு கூன் வண்டு தென்னை மரத்தண்டு இடுக்குகளில் முட்டையிடுகின்றன முட்டையில் இருந்து வெள்ளை நிறப்புழு வெளிவந்து, தண்டுப்பகுதியை துளைத்து, உள்ளே செல்கிறது.சிவப்பு கூன் வண்டு மரத்தின் சோற்றுப்பகுதியை, தின்பதால் துவாரங்கள் உருவாகிறது. துவாரங்களின் வழியே சிவப்பு நீர் வடிய ஆரம்பிக்கும். இதனால் மரம் பலமற்று, குருத்துப்பகுதி முறிந்து சேதம் ஏற்படுத்தும். காண்டாமிருக வண்டு எருக்குழிகளில் முட்டையிடும்,வண்டு தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது, தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோற்றமளிக்கும்.
இவ்வண்டு தாக்குவதால் 10-15% மகசூல் குறையும்.
மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளும் .
ஆண் மற்றும் பெண் வண்டுகள், தங்களின் எதிர்பாலினங்களை, தமது உடலில் ஒரு வேதிப்பொருளை சுரந்து, வாசனை உண்டாக்கி கவர்கிறது. இத்தகைய வாசனை வேதி பொருள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அதை இனக்கவர்ச்சி பொறியில் மருந்து பொட்டலமாக வைக்கப்படுகிறது.
இனக்கவர்ச்சி பொறி என்பது, துளையிடப்பட்ட வாளி மற்றும் வாசனை மருந்து பொருளை உள்ளடக்கியது. அத்தகைய பொறியை எக்டருக்கு, 5 பொறி வீதம், அதிக தாக்குதல் உள்ள பகுதிகளில், மருந்துடன் வைத்து, ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்க வேண்டும். இதன்மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது.
முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது.
‘செயற்கை பூச்சி கொல்லிகளின் பயன்பாட்டினால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும், விவசாயிகள் இயற்கை வழிகள் மற்றும் ஒருங்கிணைந்த முறைகளில் இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

Good info thank you