July 22, 2026

இனியாவது முயல்வோமே …

5 Page

Dr.பா.இளங்கோவன், M.Sc.,(Agri) M.B.A.,Ph.D., வேளாண்மை தோட்டக்கலைப் பயிர் சாகுபடி ஆலோசகர்

விவசாயிகளில் பலருக்கும் நல்ல பழமொழி என்று கருதி அடிக்கடி முறையற்ற நிர்வாகம் செய்ததால் செல வினை செய்து அலுத்துப்போய் பிதற்றுவது உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது. இதனைக்கூர்ந்து நோக்கினால் ஒரு விந்தையான சொல் தேய்மானத்தை காலப்போக்கில் மருவியதை நன்கு உணரலாம்
ஆம் உழவிற்கும் தொழிலுக்கும் வேறு வேறு முதலீட்டு விதிகள் இல்லை.

எல்லாஇடத்திலும் வள்ளுவன் கூறியது போல “ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை “என்பதன் கருத்து படி பண வருவாய் சம்பாதிக்கும் போது பணம்  வருகின்ற வழி சிறியதானும் பரவாயில்லை .
பணத்தைசெலவிடும் வழி பெரிதாகக் கூடாதென்பதே.

எனவே திருந்திய பழமொழி யாதெனில் உழுதவன் ஒழுங்காக  கணக்கைப்பார்த்தால்  உலகின் தேவைக்கே பணம் மிஞ்சாதா???
என்பதே.

எதிரி எங்கே …???

இன்று பல விவசாயிகளும் தனது வேளாண் அனுபவத்தில் இலாபம் வராதபோது அல்லது விலை வீழ்ச்சியால் கடும் பொருளாதார பின்னடைவு நேரின் புழுதி வாரி அரசை வாய்க்கூச்சமின்றி திட்டிக் கொண்டே தாம் செய்ய வேண்டிய அல்லது தாம் செய்யாத உத்திகளை
ஊன்றிப்பார்க்க முயல்வதில்லை.

இவர்கள் தாங்கள் செய்வது இன்ன தென்று அறியாதிருக்கிறார்கள் இவர்களுக்கு இழப்பு ஏற்பட்ட போதிலும் அதே ஊரிலே
இன்னொரு விவசாயி  இழப்பே இல்லாமல் தப்பி உள்ளாரே.அது எப்படி என்று பார்த்தால்.அவர் விலை குறைத்தால் வியாபாரிக்கு கிடையாது.ஏறும் வரை காத்திருப்பேன் என்ற மன உறுதியோடு செயல்படுவாரே ஆம், அறுவடை ஆன எந்த விளை பொருளும் விலை குறைவாகக்
கேட்பார்கள் என்பதை நாம் அறிந்து செயல்படலாமே. அந்த தருணம் எந்த வித தயக்கமும் இன்றி சிந்தித்து செயல்பட்டு சேமிக்கவோ அல்லது தம் பொருளை தாமே மதிப்புக்கூட்டவோ அல்லது சிறிய செலவு செய்து மதிப்புக்கூட்டும் நிறுவனங்களை நாடி அவர்கள் மதிப்புக் கூட்டி எங்கு விற்கிறார்களோ அங்கோ அல்லது உழவர் சந்தையில் சிறிது சிறிதாக விற்க முயலலாம் …

முன்னதாகவே பயிர் சாகுபடி அங்காடிக்கேற்ற பயிர்சாகுபடி. மதிப்பைக் கூட்டி சேமித்து விலை ஏறும் தருணம் விற்பது.என பல வழிகள் உள்ளதை அலுப்பு அல்லது அறியாமை என்கிற காரணங்களை விட முயலாமை என்ற எதிரி தம் உடனே உள்ளதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.  அடடே அதை செய்யாமல் விற்றேனே என்று அங்கலாய்க்காமல் சிந்திப்பது நன்று.என்றுமே நல்ல விலை பெற மார்க்கட் கமிட்டி உதவுமே என்றுமே அற்புத ஆதாரத்தில் இருப்பு வைத்து விற்கலாம்.நல் விலை பெற்று விற்கலாம் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. ஆக நம் எதிரி மனப்பாங்கே அன்றே அய்யா வள்ளுவர் சொன்னாரே
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்ன விந்தை, இதுதானா நமது எதிரீ அய்யோ இனி ஒரு விதி செய்வோம் .. *செய்வன திருந்தச் செய்வோம்*

இந்த உலகையே
காலம் கருதி இடத்தால் செய்தால் வெல்லலாமே வேளாண்மை என்ன அதற்கு விதி விலக்கா?