July 20, 2026

விதைப் பரிசோதனை செய்வீர்!விளைச்சலை அதிகரிப்பீர்!

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் கீழ் விதைப் பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. இவ்வாய்வகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளின் தரங்களான சுத்தத்த- ன்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம், பிற இரக கலவன்கள் போன்ற விதைத் தரத்தை ஆய்வு செய்து, ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. நம் விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள்,
காய்கறி பயிர்கள், எள், பருத்தி மற்றும் கடலை ஆகியன பிரதான பயிர்களாக
சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தரமான விதைகளைப் பயன்படுத்தும்
போது அதிக மகசூல் பெற முடியும். நெல், மக்காச்சோளம் போன்ற தானியங்களுக்கு 80 முதல் 90 சதவீதமும், பயறு வகைகளுக்கு 75 சதவீதமும், ரகப்பருத்திக்கு 65 சதவீதமும், வீரிய ஒட்டு பருத்திக்கு 75 சதவீதமும், எள்ளுக்கு 80 சதவீதமும் மற்றும் கடலைக்கு 70 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.

மேலும் அனைத்து விதைகளிலும் குறைந்தபட்சம் 97-98 சதவீத சுத்தத் தன்மை இருக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் நெல், மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளுக்கு முறையே 13,12 சதவீதமும் பயறு மற்றும் கடலை வகை விதைகளுக்கு 9 சதவீதமும் இருத்தல் வேண்டும். சான்று பெறப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
மேலும், விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80/- கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து பயன்பெறலாம் என விதைப் பரிசோதனை அலுவலர்
திருமதி.சி.சிவகாமி, வேளாண்மை அலுவலர்கள் திருமதி.ஜானகி மற்றும் திருமதி.சாய்லட்சுமி சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 9486858066 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.