
மு.தில்ஷா ( நான்காம் ஆண்டு இளங்கலை மாணவி) மற்றும்
முனைவர். கீ. இரா. மணிகண்டன் ( உதவிப் பேராசிரியர்,
பூச்சியியல் துறை ).
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் , பெரம்பலூர்
அறிமுகம்
தேனீ வளர்ப்பு என்பது தேனீக்களை வளர்த்து, தேன் மற்றும் பிற பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாகும். இன்றைய காலத்தில் இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் ஆரோக்கியப் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் தேனீ வளர்ப்பு முக்கிய தொழில்முனைவு வாய்ப்பாக வளர்ந்து வருகிறது. தேன் மட்டுமல்லாமல் பல மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் மூலம் கூடுதல் வருமானம் பெற முடிகிறது.
தேனின் மருத்துவக் குணங்கள்
• தேன் ஓர் அமிர்தமாகும். செரிமானச் சிக்கல்கள், வயிற்றுப்
புண், சளி, இருமல், வாய் மற்றும் நாக்குப் புண் ஆகியன தேனால் குணமாகும்.
• இரத்தத்தைச் சுத்திகரிக்க, இரத்தச் சிவப்பு அணுக்களை உறுதிப்படுத்த, தேன் உதவும்.
• இதய மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு, தேன் சிறந்த மருந்தாகும்.
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்
• தேன்
• தேனீ மெழுகு
• ராயல் ஜெல்லி
• தேனீ மகரந்தம்
• ப்ரோபாலிஸ் (பிசின்)
• தேனீ நஞ்சு ( விஷம்)
மதிப்பூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள்
1.தேன்
தேன் என்பது தேனீக்கள் மலர்களின் தேன் சாற்றை (Nectar) சேகரித்து, தங்களின் உடலில் உள்ள நொதிகளுடன் மாற்றம் செய்து தேன்கூட்டின் அறைகளில் சேமித்து உருவாக்கும் இனிப்பான இயற்கை உணவுப் பொருளாகும்.
பயன்பாடுகள்
• உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது
• சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது
• இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுகிறது
மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகள்
• தேன் ஊறவைத்த நெல்லிக்காய்/பழங்கள்
• தேன் ஜாம். • தேன் மிட்டாய்
• தேன் சாக்லேட் • தேன் சிரப் மற்றும் ஹெர்பல் தேன்
2. தேனீ மெழுகு
தேன் மெழுகு (Beeswax) என்பது பெண் தேனீக்களால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு ஆகும்.இது தேனீயின் அடிவயிற்றில் 4 முதல் 7 வரையிலான பிரிவுகளில் (Segments), உட்புறமாக 4 சோடிகள் (மொத்தம் 8 சுரப்பிகள்) உள்ளன. இது தேன் கூட்டை உருவாக்கவும், தேனை சேமித்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.
குறிப்பு :1 கிலோ தேன் மெழுகு தயாரிக்க, தேனீக்கள் சுமார் 8 கிலோ தேனை உண்ண வேண்டும்.
பயன்பாடுகள்
• மெழுகுவர்த்தி தயாரிப்பு •மரப்பொருள் பாலிஷ் தயாரிப்பு
• சோப்பு மற்றும் லிப் பால்ம் தயாரிப்பு
• அழகு சாதனப் பொருட்களில் பயன்பாடு
3. ராயல் ஜெல்லி
ராயல் ஜெல்லி இளம் வேலைக்கார தேனீக்களின் தலையில் உள்ள ஹைப்போபாரிஞ்சியல் சுரப்பி (Hypopharyngeal gland) மற்றும் மண்டிபுலர் சுரப்பி (Mandibular gland) ஆகியவற்றிலிருந்து சுரக்கப்படுகிறது.
இது ராணித் தேனீ மற்றும் இளம் புழுக்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.
குறிப்பு: இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு ,மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றல் ,தோல் பராமரிப்பு மற்றும் இளமைத் தோற்றம்
சிறப்பம்சங்கள்
• புரதம் மற்றும் வைட்டமின் நிறைந்தது
• உடல்நல ஊட்டச்சத்து பொருளாக பயன்படுகிறது
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
4. தேனீ மகரந்தம்
தேனீக்கள் மலர்களிலிருந்து சேகரிக்கும் மகரந்தத் துகள்களை தேன் மற்றும் சிறிதளவு உமிழ்நீருடன் கலந்து உருண்டைகளாக மாற்றியதே தேனீ மகரந்தம் ஆகும்.
தேனீக்களின் பின்கால்களில் உள்ள மகரந்தக் கூடை (Pollen basket / Corbicula) பகுதியில் சேகரித்து கூட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
நன்மைகள்
• புரதச்சத்து நிறைந்தது
• உடல் சக்தி அதிகரிக்க உதவுகிறது
5. ப்ரோபாலிஸ் (பிசின்)
Propolis தமிழில் தேனீ பசை (அல்லது) தேனீ பிசின் என்று அழைக்கப்படுகிறது.
இது தேனீக்கள் மரங்களின் மொட்டு மற்றும் பட்டையிலிருந்து சேகரிக்கும் பிசின் போன்ற இயற்கை பொருளாகும். இதனை தேன்கூட்டில் உள்ள இடைவெளிகளை அடைக்கவும், கிருமிகளிலிருந்து கூட்டைப் பாதுகாக்கவும் பயன்படுத்துகின்றன.
பயன்பாடுகள்
• கிருமி எதிர்ப்பு மருந்துகள் ,
• ஹெர்பல் கிரீம்கள்
• பல் பேஸ்ட் தயாரிப்பு,
•காயம் ஆறும் மருந்துகள்
6. தேனீ நஞ்சு ( விஷம்)
தேனீ விஷம் என்பது தேனீகளின் கொடுக்கில் (Sting) இருந்து வெளியேறும் ஒரு இயற்கை திரவமாகும். இதில் மெலிட்டின் (Melittin), அபாமின் (Apamin) போன்ற உயிரியல் செயற்பாட்டு பொருட்கள் உள்ளன.
பயன்பாடுகள்
• மருத்துவ ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது
• மூட்டு வலி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது
• உயர்ந்த மதிப்புமிக்க மருத்துவப் பொருள்
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேனீ வளர்ப்பு
நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேனீ வளர்ப்பு மேலும் எளிமையாகி வருகிறது.
ஸ்மார்ட் தேனீ பெட்டிகள்
• வெப்பநிலை கண்காணிப்பு கருவிகள்
• தானியங்கி தேன் எடுக்கும் இயந்திரங்கள்
• மொபைல் செயலிகள் மூலம் கண்காணிப்பு
மாணவர்களுக்கு தொழில்முனைவு வாய்ப்பு. கல்லூரி மாணவர்கள் தேனீ வளர்ப்பை சிறு தொழிலாக தொடங்கலாம். வீட்டுத்தோட்டம் அல்லது சிறிய நிலப்பரப்பில் கூட இதை மேற்கொள்ள முடியும். அரசு மற்றும் வேளாண்மை துறைகள் பயிற்சிகளும் உதவித்தொகைகளும் வழங்குகின்றன
தேனீ வளர்ப்பில் உள்ள சவால்கள்
• காலநிலை மாற்றம்
• பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிக பயன்பாடு
• நோய் தாக்குதல்
• தரமான தேனீ பெட்டிகள் இல்லாமை
• சந்தை வசதிகளின் குறைபாடு
முதலீடு மற்றும் வருமானம்
• ஒரு தேனீ பெட்டியின் விலை சுமார் *2300-₹2500 வரை இருக்கும்
• 5 பெட்டிகளுடன் சிறிய அளவில் தொழிலை தொடங்கலாம்
• வருடத்திற்கு ஒரு பெட்டியில் சுமார் 15 கிலோ வரை தேன் கிடைக்கலாம்
• சரியான பராமரிப்பில் லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும்
முடிவுரை
மொத்தத்தில், தேனீ வளர்ப்பு என்பது விவசாயத்துடன் இணைந்த ஒரு முக்கிய தொழிலாகும். இது தேன் மட்டுமல்லாமல் பல மதிப்பூட்டப்பட்ட பொருட்களையும் வழங்குகிறது. குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்த தொழில், நல்ல வருமானத்தையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது.
நவீன வாழ்விற்கு, இயற்கையின் கொடை
தேனீ வளர்ப்போம், தேனாய் இனிக்கும் வாழ்வு பெறுவோம்!

More Stories
வெற்றி(லை) கொடி கட்டும் தோழிகள்
தொழில்முனைவோர் + பயிற்சியாளர் = கிரிஜா
மதிப்புக்கூட்டுப் பொருள்கள் விற்பனையில் சாதிக்கும் மீனவப் பெண்