July 23, 2026

வேளாண் வணிக வாசக நேயர்களுக்கு வணக்கம்

👉 மின்னிதழ் படித்த பலரும் பாராட்டி வரும் வேளையில் விமர்சனங்களும் வருகின்றன. ஒரு நேயர் சார் இது AI உலகம், பக்கம் பக்கமா எழுதினா யாரும் படிக்க மாட்டார்கள்…..சொல்ல வேண்டியதை சுருக்கமாக “வரிச் செய்திகளாய்” சொல்லுங்கள் …. என்கிறார் அதுவும் சரிதான்.

👉 இதுவரை பெய்த மழை …?
விவசாயத்திற்கு உகந்ததாக தெரியவில்லை!… இனியாவது வானிலை யாளர்கள் கொஞ்சம் சரியாக கணித்துச் சொல்லுங்க… சாமி!


👉வாங்க / விற்க பகுதியில் மிகச் சில செய்திகளே வந்தாலும்… நிறைய கேட்புகள்… பலர் இருப்பை விற்று விட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது.

👉 சிறிய துரும்பானாலும் வேளாண் வணிகத்தின் நோக்கம் நிறைவேறி வருகிறது.

👉 இயற்கை வேளாண்மை செய்வதும் சந்தைப் படுத்தலும் ஒரு தற்சார்பு மற்றும் சமுதாய சேவையாக மட்டுமே பார்க்க முடிகிறது. இதில் கூடுதல் விலைக்கு பலர் விற்க முயல்வதும், நுகர்வோர் ‘சான்று’ கேட்டால் இல்லை என்பதும் அங்காங்கே நடந்தேறி வருகிறது.

👉 மானாவாரி வேளாண்மை என்பது பெரிய கேள்விக்குறியாகி விட்ட நிலையில் ‘டெல்டா’ பகுதியில் உறுதியாக பயிர் செய்ய முடியுமா? என்று தெரியாத நிலையில் நம் விவசாயிகளின் நிலை எப்படி இருக்குமோ?

👉 வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை போன்ற துறைகளில் பயன்படுத்தப்படாமல் ஏன்? இது யாருடைய சொத்து என்று தெரியாமலே பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அசையும் – அசையா சொத்துகள் அசைவின்றி கிடக்கின்றன. அவைகளை முறைப் படுத்தி அரசுக்கு வருமானமாக கொண்டு விவசாயிகளுக்கு நிரந்தரமாக (கட்டிடம் அல்லாத) பயனடையும் திட்டங்களை நிறைவேற்றலாமே! பூனைக்கு யார் மணி கட்டுவது?
👉விவசாய சங்கங்கள் பலர் போராடி வந்தாலும் தனி நபர் லாபம் கருதி ஒரு சிலர் சங்கம் என்ற போர்வையில் ‘சால்ரா’- தட்டி வருகிறார்கள்.

👉 அரசே இடுபொருள் வங்கி (டென்டரில்) மானியம் என்ற பெயரில் விற்பனை செய்வதை தவிர்த்தல் நலம்! இப்போதே பல பழம் பெருச்சாலிகள் தலைமைச் செயலகத்தைச் சுற்றி வருவதாக செய்தி….